சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. நேற்று அவர் நடித்திருந்த தர்பார் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுள்ள காமெடி நடிகர்களுள் யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் அவரது திருமணம் குறித்த கிசு கிசுக்களும் அடிக்கடி வந்த வண்ணமாகவே உள்ளது.
இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய Zee Cine Awards Tamil 2020 விருது விழாவில் பேசிய யோசிக்க பாபுவிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு… ”  “பொண்ணுங்களை எல்லாம் நான் பாக்குறேன். ஆனா, பொண்ணு தான் என்ன பார்க்க மாட்டேங்குது” என கிண்டலாக கூறி நகைத்தார். அப்போது கோலமாவு கோகிலா பட டயலாக் பேசிக்கட்டும்படி தொகுப்பாளர் கூறினார். அதுவும் நயன்தாரா கூட உங்கள் எதிரே தான் உட்கார்ந்து இருக்கிறார் என்று கூறி உசுப்பேத்தி விட்டார்கள். அதற்கு யோகி பாபு  “கட்டுனா அந்தப் பொண்ண தான் கட்டுவேன். அந்த பொண்ணு யாரு தெரியுமா? நீங்க தான்” என்று கூறி நயன்தாராவை வெட்கத்தில் ஆழ்த்திவிட்டார்.